இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்; றோற்றி
யிறைவனே யீண்டிறக்கஞ் செய்வா - னிறைவனே
"யெந்தா!" யெனவிரங்கு மெங்கண்மேல் வெந்துயரம்
வந்தா லதுமாற்று வான்.
அற்புதத்திருவந்தாதி – காரைக்காலம்மையார்
தானே தனிநெஞ்சந்
தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ்
செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.
அற்புதத்திருவந்தாதி – காரைக்காலம்மையார்
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?
திருவாய்மொழி
நம்மாழ்வார்
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற.
பெரிய திருமொழி- பெரியாழ்வார்
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக்,கையால் மிகு மதத் தேன்
விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே *
கண்டு வணங்கும் களிறு.
உகு மதத்தால் கால் கழுவிக்,கையால் மிகு மதத் தேன்
விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே *
கண்டு வணங்கும் களிறு.
பேயாழ்வார்
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்-
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
குலசேகர ஆழ்வார்
வணங்கும் துறைகள் பல பல ஆக்கி, மதி விகற்பால்-
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி, அவை அவைதோறு-
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய், நின்கண் வேட்கை எழுவிப்பனே
நம்மாழ்வார்
சொல்லில் அரசிப் படுதி நங்காய்! சூழல் உடையன் உன்பிள்ளை தானே
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
பெரியாழ்வார்
கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள்! வேங்கடத்துப்-
போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம் வாசகம் தந்தருளாரே
ஆண்டாள்
Comments
Post a Comment