1 மதுரைக் காஞ்சி ( தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது) உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல் தவாப் பெருக்கத்து அறா யாணர் 210 அழித்து , ஆனாக் கொழுந்திற்றி இழித்து ஆனாப் பல சொன்றி உண்டு , ஆனாக் கூர் நறவின் தின்று , ஆனா இன வைகல் நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கைப் 215 பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர் நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப் பாணர் உவப்பக் களிறு பல தரீஇ , கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ , 220 மறம் கலங்கத் தலைச் சென்று வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி , நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் தேரோடு மா சிதறி , சூடுற்ற சுடர்ப் பூவின் 225 பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக் கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு , பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் 230 பரு...
நவீனக் கவிதைகள் 1. பொருள்வயின் பிரிவு அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது சாரல் மழை பெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன் அரவம் கேட்டு விழித்த சின்னவன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள் இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள் வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தாள் தாய்போல முதல் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம் பிழைப்புக்காக பிரிந்தது வந்து கொண்டிருந்தேன் மனசுகிடந்து அடித்துக்கொள்ள (கவிஞர் விக்ரமாதித்யன்) 2. பணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் பணி முடித்து ஓய்வில் இருக்கிறார்கள் ஒருவர் கடைவாய் ஒழுக வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார் ஒருவர் போனில் சத்தமாகச் சிரித்தபடியிருக்கிறார் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருவரையொருவர் துரத்தி விளையாடுகிறார்கள் இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போ...